சைவ சமய திருபணி செய்தல்

மண்ணில் புதைந்த மற்றும் வெட்டவெளியில் காணப்படும் பழமையான சிவலிங்க திருமேனியை மீட்டு வழிபாட்டுக்கு கொண்டுவருதல்

பழமையான சிவ ஆலயங்களில் மூன்று கால பூஜைகள் தடையில்லாமல் நடைபெற உதவி செய்தல்

63 நாயன்மார் களுக்கு குருபூஜை வருடந்தோறும் செய்தல் அல்லது பொருள் உதவி பண உதவி செய்து பூஜைகள் தடையில்லாமல் நடக்க உதவி செய்தல்

அனைத்து சைவசமய திருக்கோவில்களிலும் உளவாரபணி செய்தல்

சிவனடியார்களுக்குமாகேஷ்வர பூஜை செய்து அன்னம்பாலிப்பு செய்தல் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தல்

சைவசமய பாடசாலை அமைத்தல்

சைவசித்தாந்தம் ஆகமம், திருமுறை (ஓதுவார் மூர்த்திகள்), யோகம், தியானம், கைலாயவாத்தியம், சைவத்தமிழர்களின் தற்காப்பு கலை மற்றும் நாட்டியம் ஆகிய கலைகளில் தகுதியான ஆசிரியர்களை நியமித்து சிறியோர் முதல் பெரியவர் வரை கல்வி வழங்குதல்

இல்லம்கள் தோறும் பன்னிரு திருமுறை பாரயணம் செய்தல் மற்றும் திருக்கோவில்களில் பன்னிரு திருமுறைகளை குழுவாக பாராயணம் செய்தல்

சைவ சமயத்தவர் வாழ்வாதரம் மேன்மை

நலிவுற்ற சிவனடியார்கள் ஓதுவார்கள் பெண் சிவனடியார்கள் சைவசமயத்தை சாந்த மாற்று திறனாளிகள் ஆதரவு இல்லாத சிவனடியார்கள் வாழ்வாதாரம் மேன்மை அடைய சுயதொழில் பயிச்சி அளித்து தொழில் துவங்க உதவி செய்தல்

சைவ சமயம் சார்ந்த அல்லது சாராத மக்களுக்கு மருத்துவம் சார்ந்த அனைத்து உதவிகளும் கிடைக்க உதவி செய்தல்.

சைவசமய யாத்திரை

274 சைவத் திருத்தங்களுக்கு மக்களை அழைத்துச்சென்று திருக்கோவிலின் பழமை மற்றும் வறலாறு அதன் மகத்துவத்தை அறிவித்தல்

பழமையான அனைத்து சிவ ஆலயங்களுக்கும் மக்களை புனித யாத்திரை அழைத்துச் செல்லுதல்.
திருமூலர் குரு பீடம் மற்றும் ஆலயம் அமைத்தல்

நமது கோவை மாவட்டத்தில் 63நாயன்மார்களில் ஒருவரும் பத்தாம் திருமுறை (தமிழில் சாத்திரம் ) வழங்கிய திருமூலநாயனார்க்கு குரு பீடம் அமைத்து திருமந்திரத்தை வழிபாட்டு முறைக்கு கொண்டுவருதல் மற்றும் அனைத்து அடியார்க்கும் திருமந்திரத்தை பயிற்றுவித்தல்.



சிவபூஜை திட்டம்

ஒரு நபர் மாதம் ஒருமுறை 50₹ செழுத்தலாம் மற்றும் பூஜை பொருள்கள் வழங்கலாம்

இதன் மூலம் பழமையான பாலடைந்த திருக்கோவில்கள் ஒரு காலம் முதல் 3கால சிவ பூஜை நடக்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்கள் மூன்று கால பூஜை நடக்க ஏற்பாடு செய்ய

+919626633322, +918807912922 என்ற எண்ணை அழைக்கவும்

ஆற்ற அரு நோய் மிக்கு அவனி மழை இன்றிப்
போற்ற அரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

திருமந்திரம்



News & Events
Stay updated with Menmai Kol Saivaneethi Sivanadiyargal Thirukkoottam